நிலநடுக்கத்தை பார்வையிட சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியது: 13 பேர் பலி -
குறித்த ஹெலிகொப்டரில் மெக்ஸிகோ உள்விவகாரத்துறை அமைச்சர் மற்றும் மாகாண ஆளிநர் ஒருவரும் பயணித்ததாக குறப்படுகிறது.
மெக்ஸிகோவில் ரிக்டர் அளவில் 7.2 என பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
இது ஆக்ஸாகா மாநிலத்திலிருந்து வடகிழக்கே பினோடேபா என்ற இடத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட மெக்ஸிகோ உள்விவகாரத்துறை அமைச்சரும் ஆக்ஸாகா மாகாண ஆளுநரும் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர் விமானியின் சாகசத்தால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹெல்கொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அங்கு கூடியிருந்த பொதுமக்களை கவனிக்க தவறியதாக கூறப்படுகிறது.
இதில் சிக்கி 3 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆபத்து ஏதுமின்றி அமைச்சரும் ஆளுநரும் உயிர் தப்பியுள்ளனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 370 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தை பார்வையிட சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியது: 13 பேர் பலி -
Reviewed by Author
on
February 18, 2018
Rating:
No comments:
Post a Comment