பிரதமர் பதவி விலகாவிட்டால் அமைச்சரவை கலைக்கப்படும்! -
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகாவிட்டால் அமைச்சரவை கலைக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்யத் தவறினால், உடனடியாக அமைச்சரவையை கலைப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார்.
அரசியல் அமைப்பின் 46(2)(அ) சரத்தின் அடிப்படையில் தற்போதைய அமைச்சரவை நீடிக்கும் வரையிலேயே பிரதமர் பதவியில் நீடிக்க முடியும்.
இதன்படி, அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பின்னர் பிரதமரின் பதவியும் ரத்தாகிவிடும்.
தேசிய அரசாங்கம் குறித்த உடன்படிக்கை கலாவதியாகியுள்ளது, இன்னமும் அந்த உடன்படிக்கை மீளவும் கைச்சாத்திடப்படவில்லை.
19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை பற்றிய வரையறைகள் செய்யப்பட்டுள்ளன.
19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரைவ சட்டவிரோதமானது என சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலகாவிட்டால் அமைச்சரவை கலைக்கப்படும்! -
Reviewed by Author
on
February 18, 2018
Rating:

No comments:
Post a Comment