மன்னார் கீரியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியில் தீப்பரவல்-(photo)
மன்னார் கீரி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் நேற்று சனிக்கிழமை(10) மாலை திடீர் என ஏற்பட்ட தீ பரவல் காரணமாக குறித்த காணியில் காணப்பட்ட மரங்கள் தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துளள்னர்.
மன்னார் கீரி கிராமத்திற்கு அருகில் உள்ள கர்த்தர் கோவில் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் நேற்று சனிக்கிழமை (10) மாலை திடீர் என தீப் பரவல் ஏற்பட்டது.
-இதன் போது குறித்த காணியில் காணப்பட்ட தென்னை,பனை மரங்கள் தீயில் பற்றி எரிந்துள்ளது.
குறித்த தீயை கட்டுப்படுத்த மக்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
-குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியும் மன்னார் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
-இந்த நிலையில் குறித்த இரண்டு ஏக்கர் காணியில் தீ முழுமையாக பரவி குறித்த காணியில் காணப்பட்ட தென்னை,பனை மரங்கள் தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளதாக குறித்த பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.
மன்னார் கீரியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியில் தீப்பரவல்-(photo)
Reviewed by Author
on
February 11, 2018
Rating:

No comments:
Post a Comment