வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை முதல் உள்ளூராட்சி சபைக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி தமது கட்சுPகு;க வாக்களிக்குமாறு தூண்டியமை, வீதிகளில் தமது கட்சி சின்னங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் ஆதரவாளர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததுடன், கோவில் குளம் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் தேர்தல் விதிமுறையை மீறி செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பொலிசார் ஆகியோரினால் எச்சரித்து வெளியேற்றப்பட்டனர்
வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது-Photos
Reviewed by NEWMANNAR
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment