மன்னார் மாவட்டத்தில் 77 வீத வாக்களிப்புக்கள்- மக்களுக்கு நன்றிகள்-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய-(படம்)
மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில் இன்று சனிக்கிழமை(10) மாலை மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையில் முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றுள்ளது.சுமார் 77 வீத வாக்களிப்புக்கள் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் மூலம் 47 வட்டாரங்களில் இருந்தும் 54 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
குறித்த தேர்தல் காலத்தில் எவ்வித சட்ட விரோத செயல்கள் அல்லது தாக்குதல் சம்பவங்கள் முறைப்பாடாக பதிவு செய்யப்படவில்லை.
விசேடமாக மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸ்,விசேட அதிரடிப்படையினர்,அரச திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
தேர்தல் தொடர்பில் தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சென்ற மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில் இன்று சனிக்கிழமை(10) மாலை மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையில் முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றுள்ளது.சுமார் 77 வீத வாக்களிப்புக்கள் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் மூலம் 47 வட்டாரங்களில் இருந்தும் 54 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
விசேடமாக மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸ்,விசேட அதிரடிப்படையினர்,அரச திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
தேர்தல் தொடர்பில் தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சென்ற மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 77 வீத வாக்களிப்புக்கள்- மக்களுக்கு நன்றிகள்-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய-(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 10, 2018
Rating:
No comments:
Post a Comment