புகலிடம் கோரி சென்றவர்களின் படகுகவிழ்ந்து விபத்து! 90 பேர் பலி? -
புகலிடம் கோரி சட்டவிரோதமான முறையில் படகுமூலம் ஐரோப்பாவிற்கு சென்றவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களை முதன்மைப்படுத்தி ஆபிரிக்க மற்றும் ஆசிய நாட்டவர்கள் புகலிடம் கோரி ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்கின்றனர்.
இந்நிலையில், இத்தாலி நோக்கி சட்டவிரோதமான முறையில் படகு மூலம் சென்றவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 8 பேர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய இருவரும் லிபியா நாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக பாகிஸ்தானில் இருந்தும் சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக சென்று ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் உலகம் முழுவதும் 246 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்தும், காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடம் கோரி சென்றவர்களின் படகுகவிழ்ந்து விபத்து! 90 பேர் பலி? -
Reviewed by Author
on
February 03, 2018
Rating:

No comments:
Post a Comment