குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கம்: விஞ்ஞானிகள் சாதனை
பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பு ‘செல்’களில் இருந்து புதிய காதுகள் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
சில குழந்தைகளுக்கு உடலில் காதின் வெளிப்புற பகுதி வளர்ச்சி அடையாமல் இருக்கும். அதை ‘மைகுரோசியா’ என அழைக்கின்றனர்.
இத்தகைய குறைபாடு உடையவர்களால் மற்றவர்கள் பேசுவதையும், ஒலியின் தன்மையையும் தெளிவாக அறிந்த கொள்ள முடியாத நிலை உள்ளது.
எனவே அவர்களுக்கு புதிய முறையில் காதுகள் உருவாக்கும் முயற்சியில் உயிரியல் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் உள்ள குருத்தெலும்பு ‘செல்’கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரின் உடலில் உள்ள காதுகளின் குருத்தெலும்பு செல்கள் மூலம் ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டது. இந்த நிலை மாறி தற்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பு ‘செல்’களில் இருந்து புதிய காதுகள் உருவாக்கியது சாதனையாக கருதப்படுகிறது.
தொடக்கத்தில் எலிகளின் உடலில் மனிதர்களின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கம்: விஞ்ஞானிகள் சாதனை
Reviewed by Author
on
February 03, 2018
Rating:

No comments:
Post a Comment