தமிழினத்தின் அழிவுக்கு கஜேந்திரகுமாரே காரணம்! வீ.ஆனந்தசங்கரி -
வடக்கு உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்றும் தெரிவித்துளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜனநாயகம் பற்றி எப்படிப் பேசமுடிகின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, இந்தத் தேர்தலில் வடக்கில் 2 சபைகளை மட்டும் அதுவும் அறுதிப்பெரும்பான்மையின்றி வென்றுவிட்டு வீரம் பேசுவதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
தமிழினத்தின் அழிவுக்கு கஜேந்திரகுமாரே காரணம்! வீ.ஆனந்தசங்கரி -
Reviewed by Author
on
February 18, 2018
Rating:

No comments:
Post a Comment