அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்ற இராணுவ அதிகாரியின் பின்னணி என்ன?


தமிழ் மக்களை படுகொலை செய்த முக்கிய தளபதிகளில் ஒருவர் தான் லண்டனில் செய்கை மூலம் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்று காட்டி இராணுவ அதிகாரி என இனம் காணப்பட்டுள்ளார்.
சுதந்திர தினத்தன்று லண்டனில் தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இராணுவ அதிகாரி ஒருவர், உங்கள் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று சைகை மூலமாக எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தொடர்பான தகவல்களை இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த 2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.
முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தற்பொழுது தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்ற இராணுவ அதிகாரியின் பின்னணி என்ன? Reviewed by Author on February 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.