டிராவிட்டின் கோரிக்கையை ஏற்றது பிசிசிஐ -
நியூசிலாந்தில் கடந்த 3ஆம் திகதி நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ.50 லட்சமும், உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணியின் நிர்வாகத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும் பரிசுத் தொகையை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், இந்த பரிசுத்தொகை தனக்கு அதிருப்தியை அளித்திருப்பதாகவும், இந்திய அணியின் வெற்றிக்கு அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளதால், அனைவருக்கும் சமமான பரிசுத்தொகையை அளிக்க வேண்டும் எனவும் தலைமை பயிற்சியாளர் டிராவிட் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தற்போது டிராவிட்டின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் உதவி பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகத்தினருக்கும், தலா ரூ.25 லட்சம் பரிசுத் தொகையாக சம அளவில் வழங்கப்பட உள்ளது.
தனது முடிவில் மிகவும் உறுதியான நிலைபாட்டினைக் கொண்டிருந்த ராகுல் டிராவிட்டின், சுயநலமற்ற செயல்பாடு அனைவரையும் கவர்ந்துள்ளது.
டிராவிட்டின் கோரிக்கையை ஏற்றது பிசிசிஐ -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:
No comments:
Post a Comment