மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி -
சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் 17000 ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தலைவர் கோஹ்லி 129 ஓட்டங்கள் குவித்தார், இது ஒருநாள் போட்டியில் அவரின் 35-வது சதமாகும்.
கோஹ்லி 31 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 17000 ஓட்டங்களை தொட்டார்.
ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்று வித சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து கோஹ்லி 17000 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையை தனது 363வது இன்னிங்சில் அவர் தொட்டிருப்பது புதிய சாதனையாகும்.
இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 381 போட்டிகளில் 17000 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் கோஹ்லி அதை முறியடித்துள்ளார்.
மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி -
Reviewed by Author
on
February 18, 2018
Rating:

No comments:
Post a Comment