தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்! -
குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மல்லாகம் கட்டுவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட 2 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய இராசையா பத்மவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழந்த தனது தாயின் இறுதிக்கிரியைக்காக தனது மனைவியுடன் கனடாவில் இருந்து யாழ். வந்துள்ளார்.
இதையடுத்து தனது தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவருடைய இறுதிக்கிரியை இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்! -
Reviewed by Author
on
February 18, 2018
Rating:

No comments:
Post a Comment