சின்னங்களுக்கு அல்ல நல் எண்ணங்களுக்கு....
சின்னங்களுக்கு அல்ல நல் எண்ணங்களுக்கு
ஊழல்செய்வோருக்கல்ல கொள்கையோடு-தமிழ்
உணர்வோடு உள்ளவர்களுக்கு-எம்மினத்துக்காய்
உண்மையாய் நேர்மையாய் உழைப்பவர்களுக்கு
உங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்குதான்
உள்ளூராட்ச்சி தேர்தல்-2018
உணர்ந்தால்-உடனே சென்று-அளியுங்கள்
உங்கள் வாக்கினை
உள்ளது கையில் வாக்கு
உடனே சென்று தாக்கு
துன்பம் போக்க..
தூய கரங்கள் எமது கிராமத்தினை காக்க.....
கொடி பிடித்து
வெடி கொழுத்தி
நடிக்கும் நாடகதாரிகளின்-வேடங்களை
நாடி அறிந்திருப்பாய்....தமிழா
தேடி வந்து தினம்
கூடிப்பேசி
மாடி வீடு வேலைவாய்ப்பு -இன்னும் பல
தாடி தடவி தருவதாக சொல்லியிருப்பார்
தாகத்திற்கு இல்லாத தண்ணீர்
தேர்தல் காலங்களில் கானல்நீர்
பத்து நாளும் தெளித்தது பன்னீர்- சிலருக்கு
பதநீர் புதுநீர்-மறந்து விடாதே- நீ விட்ட கண்ணீர்
நீ தன்மானத்தமிழன் அல்லவா
தலைவணங்கமாட்டாய்.......!
விலைபோகமாட்டாய்...........!
என்றல்லவா.... எண்ணியிருந்தேன்
ஓரணியில் நின்றவர்கள் எல்லாம்
ஒவ்வொரு அணியாய் இன்று
ஒன்றை ஒன்று கொன்று தின்னும் விலங்குகலாய்.!
ஒற்றுமையில் வேற்றுமை கண்டு.!
ஓடித்திரியுதுகள் -தங்களை மறந்து
பாடித்திரியுதுகள்-தங்கள் நாற்றத்தினை
மூடிவைத்தவையெல்லாம் வெளியாகி
திடீர் முடிவுகளால் ஏமாற்றத்தினை
தமிழ் தலைமைகள்-இனியும்.....
தமிழ் மக்கள் சிந்தித்தால்.......
தன்மானத்துடன் வாழ கனியும்
தமிழர் தேசம் வீசட்டும் உரிமை வாசம் கீராமத்திலிருந்து.....
கவிஞர் வை.கஜேந்திரன்
சின்னங்களுக்கு அல்ல நல் எண்ணங்களுக்கு....
Reviewed by Author
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment