மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (வயது-20) என தெரிய வருகின்றது.
-குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் (ECUBLENS VD) பகுதியில் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த புதன் கிழமை(9) மாலை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
-இதன் போது குறித்த கொலையுடன் தொடர்பு பட்ட இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
-குறித்த கொலை தொடர்பில் மேலதிக விசாரனைகளை சுவிட்சர்லாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment