பிரித்தானியாவில் சாதித்த சின்னய்யா! யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை -
பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நிதி நகரத்தை சிறந்த நகரமாக மாற்றிய உலகின் சிறந்த வங்கியாளரான இலங்கையர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து கல்வி கற்று பின்னர் பிரித்தானியாவுக்கு சென்ற பெர்னாட் சின்னய்யா Citi Bank வங்கி பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 38 வருடங்களாக Citi வங்கியில் பணியாற்றயவர், முதலில் கொழும்பு வங்கிக்கு அந்நியச் செலாவணி பிரிவுக்கு வந்தவர் பின்னர் உலகம் ஏற்றுக்கொண்ட வங்கியாளராக மாறியுள்ளார்.
ப்ளும்பர்க் உட்பட சர்வதேச செய்தி சேவைகளில், உலக அந்நிய செலாவணி தலைவர் என்றே சின்னய்யா தொடர்ந்தும் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் லண்டன் பைனான்னஸ் டைம்ஸ் செய்தியில் சின்னய்யாவின் ஒய்வு தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது.
நுகர்வோர்களை அடிப்படையாக கொண்டு தீர்வு வழங்கும் விசேட நபரான சின்னய்யா சர்வதேச மதிப்பை பெற்றுள்ள ஒருவராகும் என நேற்று வெளியாகிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சின்னய்யா 2015ஆம் ஆண்டு “யாழ்ப்பாண பையன்” (Jaffna Boy) என தனது புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த புத்தகத்தில் நான் தோல்வியுற்ற கதாபாத்திரமாக யாழ்ப்பாணத்தை விட்டு சென்றேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
முதலில் அவுஸ்திரேலிய Citi Bank வங்கியில் பணியாற்றிய சின்னய்யா, அங்கு வெளிப்படுத்திய திறமை காரணமாக லண்டனில் அனைத்து வசதிகளை வழங்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு பயணத்தை ஆரம்பித்தவர் 38 வருடங்களின் பின்னர் லண்டன் நிதி நகரத்தை சிறந்த நகரமாக மாற்றிய உலகின் சிறந்த வங்கியாளராக ஓய்வு பெறவுள்ளார்.
தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் சரே பிராந்தியத்தில் வாழும் அவர் அடிக்கடி இலங்கைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு தான் கல்வி கற்ற யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியில் விசேட விருந்தினராக கலந்து கொண்டார்.
அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில், “இன்று நடக்கும் பரிசளிப்பு விழா இந்த பாடசாலையின் எத்தனையாவது பரிசளிப்பு விழா என எனக்கு தெரியாது. ஒரு நாளும் பரிசு பெறாத ஒருவர் பிரதான விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பது நானாக தான் இருக்க வேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண தமிழான அவர் தனது உரையின் தலைப்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன உட்பட திறமையானவர்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தின் போதே அவர் நாட்டை விட்டு சென்றார். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான இவரை யார்? எப்போது இலங்கைக்கு அழைத்து வருவார்கள் சிங்கள ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் சாதித்த சின்னய்யா! யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை -
Reviewed by Author
on
February 26, 2018
Rating:

No comments:
Post a Comment