மன்னார் தூய மரியன்னை ஆலய திருவிழா....
மன்னார் தூய மரியன்னை ( தூய காணிக்கை அன்னை) திருவிழா 02.02.2018 வெள்ளிக்கிழமை, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காலை 06.45மணிக்கு ஆலய பிரதான நுழைவாயில் வைத்து மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கு மக்கள் முன்னிலையில் பங்குத் தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரால் வரவேற்க்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, திருவிழாவின் ஆரம்ப வழிபாடான மெழுகுதிரிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வும் மெழுகுதிரிப் பவனியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆன்மிக பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றினர், தொடர்ந்து ஆயர் தலைமையில் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இன்றைய திருவிழாவற்கான மறையுரையை அருட்கலாநிதி லெறின் டீ றோஸ் கொஸ்தா அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அன்னையின் திருவுருவப் பவனி மாலை 5-30 மணிக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரிலே, மன்னார் நகரத்தைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட வீதிகளுடாக அன்னை பவனி வந்து பக்தடியார்களுக்கு இறையாசி வழங்கினாள்
பெரும்திரளான மக்கள் இத் திருப்பவனியில் கலந்து செபித்தனர். பவனியின் முடிவில் ஆன்னையின் ஆலய முன்றலில் அனைவருக்கும் திருவுருவ ஆசீர் வழங்கப்பட்டது.
மன்னார் தூய மரியன்னை ஆலய திருவிழா....
Reviewed by Author
on
February 03, 2018
Rating:

No comments:
Post a Comment