புதியஆயரைவரவேற்ற.....தலைமன்னார் பங்குச் சமூகம்.
தலைமன்னார் பங்குமக்களினால் புதியஆயர் பேரருட் கலாநிதிபிடெலிஸ் லயனல் இம்மனுவேல் ஆண்டகைஅவர்களுக்குமாபெரும் வரவேற்புஅளிக்கப்பட்டது.
தலைமன்னார் பங்கின் தாய்க்கோயிலாகவிளங்குவது புனிதலோறன்சியார் தேவாலயமாகும். இதன் துணைப்பங்குகளாகதலைமன்னார் பியர் தலைமன்னார் ஸ்ரேசன் கிராமங்களின் ஆலயங்கள் விளங்குகின்றன.
மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராகியபேரருட் கலாநிதிபிடெலிஸ் லயனல் இம்மனுவேல் ஆண்டகைஅவர்களைவரவேற்கபங்குத் தந்தைநவரட்ணம் தலைமையில் சிறப்பானதிட்டம் ஒன்று இடப்பட்டிருந்தது. அதற்கமையதலைமன்னார் வீதிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டுவீதிகள் அலங்கரிக்கப்பட்டுதலைமன்னார் முழுவதும் விழாக்கோலம் பூண்டுகாணப்பட்டது.
11.02.2018 அன்றுமாலை 5.30 மணியளவில் தலைமன்னார் முச்சந்தியில் இருந்துஆயர் அவர்களைமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுடன்தலைமன்னார் மக்கள் வரவேற்றனர். வாகனபவணியின்பொழுதுதலைமன்னார் ஸ்ரேசன்மாதாகோயில் வளாகத்தில் தலைமன்னார் ஸ்ரேசன் மற்றும் தலைமன்னார் பியர் மக்களினால்ஆயர் அவர்களுக்குமாலைஅணிவித்துகௌரவிக்கப்பட்டுஆலயத்தைபார்வையிட்டபின்னர் வாகனப்பவணிதொடர்ந்தது.
பவணி JRS சந்தியில் நிறைவுற்றதும் தலைமன்னார் புனிதலோறன்சியார் ஆலயம் சார்பானமலைமக்களினால் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திறந்தவாகனத்தில் தலைமன்னார் ஸ்ரேசன் அ.த.க.பாடசாலைமாணவர்களின்பேண்ட் வாத்தியகருவி இசையுடன் பவணி தலைமன்னார் புனிதலோறன்ஸ் விளையாட்டுமைதானம் வரைசென்றது.
தொடர்ந்துதலைமன்னார் லோறன்ஸ். றோ.க.த.க.பாடசாலைமாணவர்களின் பேண்ட் வாத்தியகருவி இசைக்கப்பட்டுபவணிதொடர்ந்துஆரம்பமானது. இவ் பேண்ட் வாத்தியக்கருவிபவணியானதுபிரதானவீதியின் நாட்சந்தியில் நிறைவுற்றதும். தலைமன்னார் மக்களின் பாரம்பரிய கவி பாடும் கலைஞர்களின்கவியுடன் பவணியானது புனிதலோறன்சியார் தேவாலயத்தின் பிரதானவாயில்வரைசென்றது.
தொடர்ந்துதமிழர் பாரம்பரியமுறைப்படிவரவேற்பு நடனத்துடன் ஆயர் அவர்கள் திருப்பீடத்திற்குமுன்பாகவரவேற்கப்பட்டுஆராத்திஎடுக்கப்பட்டபின்னர் திருப்பலிஆரம்பமானது.
தொடர்ந்துபங்குமக்களுக்குமறையுரைஆற்றி இறுதிஆசீர்வாதத்தினையும் வழங்கிவைத்தார். இறுதியாகபங்குமக்கள் சார்பாக 3 ஆலயங்களையும் சேர்ந்தஆலயசபைஉறுப்பினர்களினால் பொன்னாடைபோர்த்தப்பட்டுநினைவுச் சின்னமும் ஆயருக்குவழங்கிவைக்கப்பட்டது.

புதியஆயரைவரவேற்ற.....தலைமன்னார் பங்குச் சமூகம்.
Reviewed by Author
on
February 12, 2018
Rating:

No comments:
Post a Comment