அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றிய தமிழக பெண்: உருக்கமான நன்றி சொன்ன தாய் -
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் என்ற பள்ளியில் கடந்த 14-ஆம் திகதி முன்னாள் மாணவன் நிகோலஸ் கிரஸ் என்ற இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 17 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் அமெரிக்காவை உலுக்கியுள்ள நிலையில், தமிழக ஆசிரியை ஒருவர் அங்கிருந்த குழந்தைகளை காப்பாற்றி அமெரிக்க மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்ற பெண் துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பிற்கு பாடம் எடுக்கும் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ தினத்தின் போது வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த சாந்திக்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
தொடர்ந்து உன்னிப்பாக கேட்ட அவர் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து, வகுப்பறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடியுள்ளார்.
அதுமட்டுமின்றி குழந்தைகள் அனைவரையும் டெஸ்கிற்கு அடியில் சென்று அமர்ந்து கொள்ளும் படியும் கூறியுள்ளார்.
பொலிசார் வந்து கதவை தட்டிய போது, கொலையாளி தான் தட்டுகிறான் என்று எண்ணி கதவை திறக்க மறுத்துள்ளார். அப்போது கதவை உடைத்து உள்ளே வா அல்லது சாவியைக் கொண்டு திறந்து வா, நான் கதவை திறக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதன் பின் கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிசார் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து அவர் பாடம் எடுக்கும் வகுப்பில் படித்து வரும் பிரெயின் என்ற மாணவனின் தாயார் டான் ஜெர்போ கூறுகையில், ஆசிரியை சாந்தியின் புத்திசாலித்தனமான செயல்பாட்டால், என் மகன் உள்பட ஏராளமான குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அதே வேளையில், இறந்துபோன குழந்தைகளை நினைத்து மனம் வருத்தமும் வேதனையும் அடைகிறோம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றிய தமிழக பெண்: உருக்கமான நன்றி சொன்ன தாய் -
Reviewed by Author
on
February 18, 2018
Rating:
No comments:
Post a Comment