பெண்ணியம்....சர்வதேச பெண்கள் தினத்தினை 08-03-2018 முன்னிட்டு வாழ்த்துக்களுடன்.....
சர்வதேச பெண்கள் தினத்தினை 08-03-2018 முன்னிட்டு
வாழ்த்துக்களுடன்.....
பெண்ணியம்................
தாய்மைக்கு தலைவணங்கி
தரணியெங்கும் தவறிழைக்கும்
பெண்ணினத்தினை புறணி பேச
துணிகிறேன் தற்கால பெண்ணியம்
மனிதம் இழந்த மாந்தரிடம்
புண்ணியம் பெறும் நோக்கில்
எண்ணியும் பார்க்கிறேன் பெண்ணியம்
கண்ணியம் தவறும் பெண்களிடம்
மரபை தாரை வார்க்கும்
மாதரை பேதையென்பதா....
மேதையென்பதா......
பூங்கோதையென.....
பூமாலை கொண்டு கவிமாலை சூடும்-கவிஞர்களே
பாரினிலே பெண்ணுக்காய்
பாரதிக்கு பிறகு பெரியார்-பலர்
பாவையர் யார்... யார்... சொன்னாலும்...
பழகி விட்டார்களா...பழக்கிவிட்டார்களே.....
பெண்கள் கற்பு- சில
ஆண்களுக்கு செருப்பு
பெண்ணிடத்தில் எல்லாம் இருப்பு
பெண்ணியத்திற்கு தேவை சுய பாதுகாப்பு
காலகாலமாய் பெண்கள்
நாட்டின் கண்களாக தெய்வங்களாக
வீட்டின் தூண்களாக-ஏன்
ஏட்டிலும் புலி வீரம் கொண்ட மான்களாக
கலை கலாச்சாரப்பண்புகளை
காட்ச்சிப்படுத்தும் வெகுசனமா -பெண்ணியம்
கற்புக்கு வரைவிலக்கணம் தரும் விமர்சனமா-பெண்ணியம்
காலகாலமாய் உயிரை உற்பத்தி செய்யும் சாதனமா பெண்
கண்ணுக்கு விருந்தாய்
காட்ச்சிப்பொருளாய்
பிள்ளைக்கு தாயாய்
கணவனுக்கு மனைவியாய்-இன்னும்
பல வழிகளில் பிழியப்படும் பெண்ணியம்
கண்னோடு கண் நோக்கின்
அங்கே கண்ணியம்
கழுத்தின் கீழ் கண்நோக்கின் அங்கே
மீறப்படும் பெண்ணியம்
பெண்கள் என்றால் பல நினைவு
பெண் உயிர் உள்ள உணவு
பெண்ணிற்கு வேண்டும் எழுச்சியுணர்வு
பலிக்குமா பாரதி கண்ட கன்வு
ஆண்களின் பயமா....
பெண்களின் பயமா....
இந்தப்பெண்ணியம்.....
பெண்ணியம்
கணிதமா.....
புனிதமா........
வை.கஜேந்திரன்-
"துடிக்கும் விழிகள்" 2014 கவிதை தொகுப்பில் இருந்து.
பெண்ணியம்....சர்வதேச பெண்கள் தினத்தினை 08-03-2018 முன்னிட்டு வாழ்த்துக்களுடன்.....
Reviewed by Author
on
March 08, 2018
Rating:

No comments:
Post a Comment