பெண்கள் சுயசிந்தனைவாதிகளாக இருக்கவேண்டும்.....பார்கவி எனும் சிவகௌரி புஸ்பராசன்
கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில் சர்வதேச மகளிர்தினத்தின் சிறப்பு சந்திப்பாக புவியியல் BA இளமானியும் MA சமூகவியல் முதுமானியும் கவிதாயினியும் மனிதவள அபிவிருத்தி அலுவலகருமான பார்கவி எனும் திருமதி சிவகௌரி புஸ்பராசன் அவர்களின் அகத்தில் இருந்து…..
தங்களைப்பற்றி----
மதிப்பிற்குரிய மன்னார் மண்ணே பிறப்பிடமும் வாழிடமும் ஆகும் எனது தந்தை பிருந்தாவனநாதன் தாயார் ராஐராஜேஸ்வரி எனது கணவன் பிள்ளைகளுடன் கலையுடன் சந்தோசமாக பெரியகடை மன்னாரில் வாழ்ந்து வருகின்றேன்.
கல்விக்காலம் பற்றி----
எனது ஆரம்பக்கல்வியை கௌரியம்பாள் பாடசாலையிலும் பின் மன்.புனித.சவேரியார் பெண்கள் கல்லூரியிலும் யாழ்பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்பு BA.இளமானிக்கற்கையினையும் சமூகவியல் MA.முதுமானிக்கற்ககையினையும் கற்று தற்போது மன்னார் பிரதேச செயலகத்தில் மனிதவளஅபிவிருத்தி அலுவலராக பணியாற்றுகின்றேன்.
கவிதை துறைக்கு வருகை பற்றி….
நான் கல்விகற்கும் காலத்திலே இசை கவிதை பாடலாக்கம் நாடகம் பேச்சு போட்டி போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொள்வேன் அதுபோல தினமுரசு பத்திரிகையில் சிறிய படம் போட்டு அதற்கு கவிதை எழுத வரும் அதற்கும் எழுதினேன் எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்று எண்ணம் வந்தால மட்டும் தான் எழுதுவேன்.
உங்களது முதல் கவிதை என்றால்….
கவிதைப்போட்டியில் ஐக்கியம் எனும் தலைப்பில் எழுதியுள்ளேன் அதுவும் தற்போது கைவசம் இல்லை.
கல்வி கற்றலில் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை பற்றி----
நான் சிறுவயது முதல் பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றதினால் பல்கலைக்கழகம் சென்றபோது ஆரம்பத்தில் கொஞ்சம் சமாளிக்க கஸ்ரமாகத்தான் இருந்தது பின்பு 04 ஆண்டுகள் பழக்கமாகி விட்டது எனக்குள்ளும் ஆளுமையும் துணிவும் வந்து இலகுவாக ஏற்றுக்கொண்டேன் எதிர்கொண்டேன்.
பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெறும்போது மனநிலை எப்படி இருந்தது…..
நான் முதலாவது பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்ற வேளை என்னை விட எனது குடும்பம் தான் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர் அதுபோல இரண்டாவது பட்டம்பெறும் போதும் மகிழ்ச்சிக்கு தடையேது.
அடுத்த படைப்பு எப்போது வெளிவரும் எதை பற்றியது----
எனது முதலாவது படைப்பு அது ஒரு கனாக்காலம்-2016 கவிதை அடுத்த படைப்பும் சிறுகதையோ.... அல்ல கவிதைதான் அது தனியே பெண்கள் சார்ந்ததாக பெண்களின் விழிப்புணர்வு குரலாகவே வெளிவரும். தற்போது பொருளாதாரம் உதவியாக இருந்தால் சாத்தியம் தான்…
கவிதைக்குப்பின் நாவல் எழுதும் எண்ணம் உள்ளதா…
நாவல் எழுதும் எண்ணம் இல்லை எழுத்தில் முதிர்ச்சி அடைந்ததும் எழுதுவேன் .
பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் விமர்சனங்கள் பற்றி---
பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஏன் நடக்கின்றது என்று பலமுறை சிந்தித்துள்ளேன் கோபப்பட்டுள்ளேன் இதைதடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றியும் சிந்தித்துள்ளேன் பிரச்சினைகள் பலகோணத்தில் இருந்தால் தீர்வும் பலகோணத்தில் தானே இருக்கும் என்னால் தீர்வு என்றால் அது கவிதைதான் அதையே நான் செய்துள்ளேன்.செய்துவருகின்றேன்.
மன்னாரினைப்பொறுத்தமட்டில் கலைத்துறையில் பெண்கள் எழுச்சி பெற்றுள்ளார்களா…
ஆம் பெற்றுவருகின்றார்கள் ஆனாலும் இயல்பாக பெண்கள் தங்களின் திறமையினை வெளிக்கொணர்வதில்லை அதனால்தான் பெண்கள் சிலதுறைகளில் பிரகாசிக்க தவறி விடுகின்றனர்.
ஏன் நானும் எனது கவிதையாற்றலை படித்து பட்டம்பெற்று வேலை கிடைத்து பெற்றபின்புதான் வெளிக்கொணர்ந்துள்ளேன் என்றால் பாருங்கள் இப்படிப்பல பெண்கள் உள்ளனர் எம்மோடு…..
கவிதாஜினிகளுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என்றால்---
தகுதிகள் எள்று சொல்லாமல் வாசிப்பு கற்றல் படிப்பு என்றிருந்தாலும் பெண்கள் சுயசிந்தனைவாதிகளாக இருக்கவேண்டும் அப்போதுதான் ஆளுமையுடையவர்களாக தங்களை வளர்த்து கொள்ள முடியும்.
வாழ்வில் யாரை முன்மாதிரியாக கொண்டுள்ளீர்கள்--
நான் எனது சமூகவிழிப்புணர்வு சிந்தனையுடைய நீயா…? நானா… ? கோபிநாத் அவர்களைப்பிடிக்கும் ஏன் என்றால் சமூகவிழிப்புணர்வு பெண்கள் சிறுவர்கள் முன்னேற்றம் என்பதையும் நான் அதிகம் விரும்புபவள் அதை கருத்தமர்வோ செயல்திட்டங்களையே செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். எதிர்காலத்தில் செய்யதிட்டமிட்டுள்ளேன.
உங்களை கவர்ந்த பெண் கவிஞர் பற்றி---
எனக்கு பல கவிஞர்களை பிடிக்கும் அதிலும் குறிப்பாக கவிஞர் தாமரையை பிடிக்கும் இலகு தமிழில் இனிமையாக பாடல்களையும் தமிழையும் பார்க்கலாம்.
பெண் எழுத்தாளர்களுக்கு தங்களின் கருத்து----
பெண்கள் தங்களின் பிரச்சினைகளை நெருடல்களை தயங்காமல் எழுத்தின் மூலம் வெளிக்கொணரவேண்டும் தெளிவுபடுத்த வேண்டும்.
உங்களின் கலைவளர்ச்சிக்கு உதவியவர்கள் பற்றி----
எனது கலைவளர்ச்சி எனும் போது அது தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் வெளியீடு செய்துவைத்த எனது முதலாவது அது ஒரு கனாக்காலம் கவிதை நூலின் பின் மன்னார் அமுதன் தமிழ் சங்க தலைவர் S.A.உதயன்
முன்னாள் தமிழ் சங்க தலைவர் தர்மகுமாரகுருக்கள் கலாச்சார உத்தியோகத்தர்களான திருமதி.சுகிர்தா திருமதி.மணிசேகரம் செல்வி அபிராமி இன்னும் பலர் உள்ளனர் அத்தோடு எனது குடும்பமும் எனது கணவரையும் சொல்லலாம் கலையார்வம் மிக்கவர் முழுமையான ஆதரவும் வழங்கியுள்ளனர்.
கலைத்துறையில் ஈடுபாடு குறைவாக இருக்க காரணம்---
- தனிப்பட்ட வாழ்க்கை
- தொழில் துறை
- கலைத்துறை இம்மூன்றினையும் சரிசமமாக பார்க்கவேண்டியுள்ளது அத்துடன் வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது எது என்பதை நான் அறிந்து செயற்படுகின்றேன.;
கலைஞர்கள் தான் தங்களை முதல் வெளிக்கொணரவேண்டும் அதற்குதான் தங்களது துறையுடன் சம்மந்தப்பட்ட சங்கங்கள் கழகங்கள் இணைந்து கொண்டுதான் தங்களையும் தங்களது திறமைகளையும் வெளிக்கொணரவேண்டும் அப்போது தான் அவர்களின் திறமைக்குரிய கௌரவம் கிடைக்கும் அதற்கு கலைஞர்கள் தான் முன்வரவேண்டும். என்பது எனது கருத்து.
உங்களது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் பற்றி---
- மறக்கமுடியாத விடையம் என்றால் எழுத்து துறையில் நான் கவிதையில் முதல் முறையாக முதல் இடம் பெற்றது.
- தொழில்ரீதியில் எமது குழுச்செயற்பாட்டிற்காக சிங்கப்பூர் பயணம் சென்றிருந்தோம் அதுபோல எனது கவிதைப்படைப்பினையும் நினைக்கின்றேன்.
தங்களது கலைச்செயற்பாடுகளில் கிடைத்த பரிசுகள் பற்றி---
- 2015 பிரதேச கலைஇலக்கிய விழாவில் 1ம் இடம் கவிதை-அது ஒரு கனாக்காலம்
- 2015 மாவட்ட இலக்கிய விழா கவிதை 1ம் இடம்
- 2016 பிரதேச இலக்கிய விழா பாடலாக்கம் வடமேற்கில் ஒரு வளநிலம் 1ம் இடம்
- மாவட்ட இலக்கியவிழா பாடலாக்கம் 1ம் இடம்
- 2016 அரசஉத்தியோகத்தர் ஆக்கத்திறன் போட்டி சிறுவர்பாடல் 3ம் இடம் வீட்டில் ஒரு தோட்டம்
- 2017 பிரதேச இலக்கிய விழா சிறுகதை வாழ்க்கைப்பாடம் 3ம் இடம் பாடலாக்கம் தமிழும் தமிழனும் 3ம் இடம்
- 2017 அரச உத்தியோகத்தர் ஆக்கத்திறன் போட்டி
- சிறுகதை 6ம் இடம் "முற்றுத்து மாமரம்".
கலைத்துறைப்பங்களிப்பு-----
- 2016 இலங்கை எழுத்தாளர் சங்கம் நடாத்திய கலந்துரையாடலில் பங்கேற்பு
- 2015 மன்னார் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து கலைவிழாக்கள் புத்தகவிழாக்களில் பங்கேற்பு
- 2016 அது ஒரு கனாக்காலம் கவிதை நூல்வெளியீடு(முதலாவது படைப்பு)
- 2016 மொறட்டுவப்பல்கலைக்கழக தமிழ் இலக்கியமன்றம் நடாத்திய விவாதப்போட்டிpயில் நடுவராக கலந்து கொண்டமை
- 2016-2017 பிரதேச இலக்கிய பாடசாலை மட்டப்போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியமை.
- 2017 மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுவேலைத்திட்’டத்தின் பாடலாக்கம் எழுதியமை. இறுவட்டில் வெளியாகவுள்ளது.
- 1000 கவிஞர்கள் கவிதை பெருநூலில்-(டெங்கு நுளம்பு)
- மன்னல்-2016 கவிதை (நகர வாழ்க்கை)
- மன்னல்-2017 சிறுகதை(வாழ்க்கை பாடம்)
- பனை அபிவிருத்திச்சபை கவிதை (கறுப்பு கற்பகதரு)
- வெள்ளாப்பு கவிதை (கறுப்பு கற்பகதரு) இவைதான் என் ஞாபகத்தில் உள்ளவை…
இந்த பெண்கள் தினத்தில் தங்களின் கருத்துப்பகிர்வு.....
பெண்களுக்காண சிறப்பு நேர்காணல் என்பதால் தான் இந்த செவ்விக்கு ஒப்புக்கொண்டேன் இதுவரை பெண்களுக்கான வரையறைகள் இலக்கணங்கள் கட்டுப்பாடகள் தான் இந்த சமூகத்தில் அதிகமாகவுள்ளது. ஆனால் புரிந்து கொள்ளவேண்டிய விடையம் என்னவென்றால் ஆண்களும் அவர்களைச்சார்ந்தவர்களும் தான் பெண்களுடன் எப்படிப்பழகவேண்டும் நடந்து கொள்ளவேண்டும் மதிக்கவேண்டும் என்கின்ற நல்ல சிந்தனையை வளர்க்கவேண்டும் அறிந்துகொள்ளவேண்டும் என்பது எனது திடமான கருத்து.
மனித வளஅபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் போது மன்னாரில்…..
முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தொழில்ரீதியக கருத்து கூறவிரும்பவில்லை…
மன்னார் மக்களினதும் கலைஞர்களினதும் எழுச்சியினை தனது சேவையாக கொண்டு செயற்படும் நியூமன்னார் இணையம்பற்றி…..
நான் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத்தவிர வேறுஎதையும் பார்ப்பதில்லை அதுபோல் சமூக ஊடகங்களையும் பார்ப்பதில்லை நீங்கள் சொல்லும் போது பாரியசேவையினை செய்துவருகின்றீர்கள் என்பது புலனாகின்றது எனது முதலாவது செவ்வியும் இதுதான் அந்த வகையில் காத்திரமான உங்கள் பணி தொடரவேண்டும் என வாழ்த்திப்பாராட்டுகின்றேன.
சர்வதேச பெண்கள் தினத்தின் சிறப்பு நேர்காணல்
வை-கஜேந்திரன்-
பெண்கள் சுயசிந்தனைவாதிகளாக இருக்கவேண்டும்.....பார்கவி எனும் சிவகௌரி புஸ்பராசன்
Reviewed by Author
on
March 08, 2018
Rating:

No comments:
Post a Comment