உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் இடைநில்லா விமானச் சேவை...18 மணி நேரம் - 14,500 கிமீ!
பெர்த்: குவாண்டஸ் விமான நிறுவனம் 14,500 கி.மீ தூரம் பயணிக்கும் இடைநில்லா விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.
உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவைகளில் குவாண்டஸ் நிறுவனம் இணைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு போயிங் 787 ட்ரீம்லைனர் என்ற இடைநில்லா விமானச் சேவையை தொடங்கியுள்ளது. பெர்த்தில் இருந்து கிளம்பிய விமானம் 17 மணி நேரத்தில் 14,500 கி.மீ தூரம் பயணித்து, லண்டன் நகரை அடைகிறது.
உலகின் நீண்ட தூர இடைநில்லா விமானச் சேவை:
* கத்தார் ஏர்வேஸ் விமானம் 921, வர்த்தக ரீதியில் உலகின் நீண்ட தூர விமான சேவையை வழங்குகிறது. நியூசிலாந்தில் இருந்து 18 மணி நேரத்தில் 14,500 கி.மீ தூரம் பயணித்து, கத்தார் வந்து சேருகிறது.
* எமிரேட்ஸ் ஏர்லைன் விமானம் 449, ஆக்லாந்தில் இருந்து 17 மணி 30 நிமிடங்களில் 14,200 கி.மீ தூரம் பயணித்து துபாய் வந்து சேருகிறது.
* யுனைடெட் ஏர்லைன்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் எல்.ஏ.எக்ஸ் விமான நிலையத்தில் இருந்து 14,100 கி.மீ தூரம் பயணித்து, சிங்கப்பூர் வந்து சேருகிறது.
* யுனைடெட் 787 விமானம், தெற்கு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து 17 மணி 30 நிமிடங்களில் 13,800 கி.மீ தூரம் பயணித்து, ஆஸ்திரேலியா வந்து சேருகிறது.
* கடந்த 2004 - 2013ல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 22, நியூயார்க் நேவார்க் விமான நிலையத்தில் இருந்து 15,000 கி.மீ தூரம் பயணித்து, சிங்கப்பூர் வந்து சேர்ந்தது. செலவு அதிகம் காரணமாக விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் இடைநில்லா விமானச் சேவை...18 மணி நேரம் - 14,500 கிமீ!
Reviewed by Author
on
March 25, 2018
Rating:

No comments:
Post a Comment