உலகிலேயே அதிக விலை கொண்ட தங்க சாக்லேட்!!
போர்ச்சுகல் நாட்டில் உலகிலேயே அதிக விலை கொண்ட தங்க பிளேட்டினால் ஆன சாக்லேட் விற்பனைக்கு வந்துள்ளது.
சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஒபிடோஸ் என்ற இடத்தில் இந்த சாக்லேட் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 23 காரட் தங்க பிளேட்டினால் ஆன இந்த சாக்லேட்டுக்கு குளோரியஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6 லட்சம். குங்குமப்பூ, மணமூட்டும் காளான், மடகாஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்ட வனிலா மற்றும் தங்க செதில்களால் இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரூ. 6 லட்சம் விலை கொண்ட தங்க சாக்லேட்!!
இதை டேனியல் கோம்ஸ் என்பவர் கடந்த ஓராண்டாக தயாரித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சாக்லேட்டில் தங்கத்தால் சீரியல் எண் பதியப்பட்டுள்ளது. முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரிப்பனால் சுற்றப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக விலை கொண்ட தங்க சாக்லேட்!!
Reviewed by Author
on
March 25, 2018
Rating:

No comments:
Post a Comment