உலகின் பில்லியனர்களால் கூட வாங்க முடியாத 5 வைர கற்களின் பட்டியல் -
இந்த நிலையில் உலகின் பெரும் பணக்காரர்களால் வாங்க முடியாத விலை மதிப்பற்ற 5 கற்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.
Letseng Diamond
நிறமற்ற இந்த வைரமானது ஆப்பிரிக்காவின் Lesotho பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.910 காரட் எடை கொண்ட இந்த வைரமானது இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற வைரங்களில் 5-வது என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த வைரத்தின் அதிகபட்ச சராசரி விற்பனை விலையானது 50 முதல் 100 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது.
Bahia Emerald
உலகின் மிகப்பெரிய வைர கற்களில் 4-வது இடத்தில் உள்ள இந்த வைரத்தின் தற்போதைய அதிகபட்ச சராசரி விற்பனை விலையானது 250 முதல் 925 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது.Chaiyo Ruby
உலகின் 3-வது மிகப்பெரிய வைரம் என போற்றப்படும் இதன் தற்போதைய அதிகபட்ச சராசரி விற்பனை விலையானது 448 மில்லியன் டொலர் என தெரிவிக்கின்றனர்.இந்த வைரத்திற்கு தாய்லாந்து மற்றும் பர்மா நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதன் உண்மையான உரிமையாளர் யார் என்பதில் தெளிவான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
Guinness Emerald
கொலம்பியாவின் காஸ்ஸ்கெஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய வைரத்தின் மதிப்பானது சுமார் 500 மில்லியன் டொலர்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வைரமானது கொலம்பியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.‘Star of Adam’ Blue Star Sapphire
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த வைரமானது உலகில் இதுவரை கண்டெடுக்கப்பட்டவைகளில் மிகப்பெரியது என கூறப்படுகிறது. 1,404 காரட் எடை கொண்ட இந்த வைரமானது சுமார் 100 முதல் 300 மில்லியன் டொலர் விலை இருக்கும் என கூறப்படுகிறது.
உலகின் பில்லியனர்களால் கூட வாங்க முடியாத 5 வைர கற்களின் பட்டியல் -
Reviewed by Author
on
March 09, 2018
Rating:
No comments:
Post a Comment