சவுதி பட்டத்து இளவரசரின் பிரித்தானிய சுற்றுப்பயணம்: மலைக்க வைக்கும் விளம்பர செலவு -
சவுதியின் பட்டது இளவரசர் சல்மான் அரசு முறைப்பயணமாக பிரித்தானியா வந்துள்ளார்.
அவர் பிதமர் தெரேசா மே மற்றும் ராணியையும் சந்தித்துள்ளார். இந்த நிலையில் இளவரசர் சல்மானுக்கு எதிராக பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், சவுதி அரேபியாவின் ஏமன் போர் தொடர்பில் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இளவரசர் சல்மானின் வருகையை முன்னிட்டு, லண்டனில் விளம்பரங்கள் பெருமளவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான விளம்பரங்களில் இளவரசர் சல்மான் பெண்களுக்கு அளித்துவரும் முன்னுரிமை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுதி இளவரசரின் பிரித்தானிய வருகைக்கான விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 1 மில்லியன் பவுண்ட்ஸ் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி ஆதரவுடன் கடந்த 2015 மார்ச் முதல் ஏமனில் நடைபெறும் போரில் இதுவரை பொதுமக்களில் 9,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 52,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். மட்டுமின்றி சுமார் 22 மில்லியன் மக்கள் உலக நாடுகளின் நிதி உதவிக்கு காத்திருக்கின்றனர்.
மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 4.6 பில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான ஆயுதங்களை சவுதி அரேபியாவுக்கு பிரித்தானியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுதி பட்டத்து இளவரசரின் பிரித்தானிய சுற்றுப்பயணம்: மலைக்க வைக்கும் விளம்பர செலவு -
Reviewed by Author
on
March 09, 2018
Rating:
No comments:
Post a Comment