-மன்னாரில் இடம் பெற்ற வடமாகாண எச்.ஐ.வி மற்றும் ஏயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு மீளாய்வு கூட்டம் -(படம்)
வடமாகாண எச்.ஐ.வி மற்றும் ஏயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு மீளாய்வு கூட்டம் இன்று(22) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தலைமையில் இடம் பெற்றது.
மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,மு ல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி இடம் பெற்ற குறித்த மீளாய்வு கூட்டத்தில் மாகாண பணிப்பாளர்,சுகாதார அமைச்சின் தேசிய எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ,வடமாகாணத்தில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்கள், வைத்தியர்கள், மற்றும் வைத்தியசாலையில் ஏனைய உத்தியோகஸ்தர்கள், என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது வடமாகணத்தில் எச்.ஐ.வி மற்றும் ஏயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் எச்.ஐ.வி தொற்று தொடர்பாக பரிசோதனை முகாம்களை மாவட்ட ரீதியில் ஏற்பாடு செய்தல்,கண்டு பிடிக்கப்படாத நோய் தொடர்பில் தொடர்ச்சியாக சிகிச்சை வழங்குதல் மற்றும் எச்.ஐ.வி.தொடர்பான விழிர்ப்பணர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

-மன்னாரில் இடம் பெற்ற வடமாகாண எச்.ஐ.வி மற்றும் ஏயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு மீளாய்வு கூட்டம் -(படம்)
Reviewed by Author
on
March 22, 2018
Rating:

No comments:
Post a Comment