அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்,சிங்கள,முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பௌத்த அறநெறி பாடசாலை! -


மாத்தறை பிட்டபெத்தர, எத்துஎல, ரம்புக்கன பிரதேசத்தில் உள்ள பௌத்த அறநெறி பாடசாலை ஒன்றில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் அறிநெறியை கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கன போதிராஜாராம விகாரையில் இந்த அறநெறி பாடசாலை இயங்கி வருகிறது. செவ்வந்தி என்ற தமிழ் ஆசிரியர் பௌத்த அறநெறி பாடங்களை நடத்தி வருகிறார்.

அறநெறி பாடசாலையில் பயிலும் பெரும்பாலான பிள்ளைகள் தோட்டங்களில் வசித்து குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள். சுமார் 70 பிள்ளைகள் கற்று வருகின்றனர்.
குறைந்த பௌதீக வளங்களுடன் அறநெறி பாடசாலை இயங்கி வருகிறது. மூங்கில் மரங்களில் வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தகரத்திலான கூரை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாய்களில் அமர்ந்து கற்று வருகின்றனர்.

பிரதேச மக்களின் உதவியுடன் விகாராதிபதி அறநெறி பாடசாலையை முன்னேற்றி வருவதுடன், விகாரையில் தாது கோபுரம் ஒன்றை நிர்மாணிக்க கூட வசதிகள் இல்லை என விகாராதிபதி புவக்பட ஓவிட சாரானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கதிற்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த அறநெறி பாடசாலை மற்றும் விகாரையை அபிவிருத்தி செய்வது பெரிய புண்ணியமாக இருக்கும் என விகாராதிபதி, அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்,சிங்கள,முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பௌத்த அறநெறி பாடசாலை! - Reviewed by Author on March 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.