இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு -
தமிழகம் - இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் இராமேஸ்வரத்தில் மீனவர்களிடையே கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 10 பேரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்துள்ளனர்.
அத்துடன், மீனவர்களின் விசைபடகு இரண்டினையும் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் இராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு -
Reviewed by Author
on
March 26, 2018
Rating:

No comments:
Post a Comment