நெய்யை இதோடு சேர்த்துச் சாப்பிடுங்கள்: இவர்கள் மட்டும் தொடவே கூடாதாம் -
ஏனெனில், அதில் அதிகக் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், அதில் வனஸ்பதி, தாவர எண்ணெய், விலங்குகள் கொழுப்பு போன்ற கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.
ஆனால் நெய்யை எந்த முறையில், எந்த உணவுகளுடன் சேரும் போது, அது ஆரோக்கியம் என்பதை பற்றியும் நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
நெய்யை எந்த உணவுடன் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம்?
- ஒரு வயது குழந்தை முதல் ஐம்பது வயதுள்ள பெரியவர் வரை பசுநெய்யைச் சாப்பிடலாம். ஆனால் சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிட வேண்டும்.
- மதிய உணவில் 1/2 டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. ஆனால் அதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும்.
- நெய் ஊற்றி தோசை வார்த்தால், மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க வேண்டும். மதிய உணவில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- சூடாக சமைத்த உணவில் மட்டுமே சேர்க்க வேண்டும் அல்லது பசு நெய்யை உருக்கிய பிறகு தான் சாப்பிட வேண்டும்.
- சூடு இல்லாத உணவுகள், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளில் நெய்யை சேர்த்து சாப்பிடக் கூடாது.
- பாசிப் பருப்போடு நெய்யை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதனால் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் சேரும்.
- பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்ற அசைவ உணவுகளோடு நெய்யை சேர்க்கக் கூடாது.
குறிப்பு
செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, வாந்தி வரும் உணர்வு, கல்லீரல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நெய்யை இதோடு சேர்த்துச் சாப்பிடுங்கள்: இவர்கள் மட்டும் தொடவே கூடாதாம் -
Reviewed by Author
on
March 04, 2018
Rating:
No comments:
Post a Comment