ஸ்ரீதேவி விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1980களிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்று பெயர் பெற்றவர். தான் வாழ்ந்த காலம் வரை மிகவும் சொகுசான வாழ்க்கையை வாழ்த்துள்ளார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் இருக்கும். மும்பையில் உள்ள இவரது 3 பங்களாக்கள் சுமார் 62 கோடி மதிப்புள்ளது. ஸ்ரீதேவி பயன்படுத்திய 7 கார்களின் மதிப்பு மட்டும் சுமார் 9 கோடி. அதில் அவருக்கு மிகவும் பிடித்தது போர்ஸ்ச் கார் தான். நடிகைகளில் 2 கோடி மதிப்புள்ள பென்டலி கார் வாங்கிய முதல் நடிகை ஸ்ரீதேவி தான்.
7 கார்களின் மதிப்பு மட்டும் சுமார் 9 கோடி, 3 பங்களாவின் சுமார் 62 கோடி, 2 கோடி மதிப்புள்ள பென்டலி கார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஸ்ரீதேவி எந்த ஒரு சரிவையும் சந்தித்ததில்லை. ஸ்ரீதேவி ஆண்டு வருமானம் 13 கோடி ஒரு படத்திற்காக சம்பளம் மட்டும் 3.4 முதல் 4.5 கோடி வரை சம்பளமாக பெற்றார். 2012 இல் வெளியான இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி தனது சம்பளத்தை 24% உயர்த்தினார். அந்த சம்பளம் தற்போது தமிழ் முன்னணி நடிகர்களின் சம்பளத்திற்கு சமம்.
அந்த படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி எந்த திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை. தமிழில் நடித்த புலி திரைப்படமும் பெரிதாக பெயர் வாங்கி தரவில்லை என்றாலும் நல்ல சம்பளத்தை கொடுத்தது.கோடிகளில் சம்பளம் இருந்தாலும் புலி பட வெளியீட்டின் பொது இவர் சம்பளம் தொடர்பாக பிரச்சனை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவி விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
Reviewed by Author
on
March 04, 2018
Rating:

No comments:
Post a Comment