அண்மைய செய்திகள்

recent
-

இரட்டை விருது பெற்ற ரோஜர் பெடரர் -


பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பிரான்சில் நடந்த விருது வழங்கும் விழாவில், சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது மற்றும் சிறப்பு விருது என இரட்டை விருதை பெற்றுள்ளார்.
லாரெஸ் உலக விளையாட்டுகள் விருது விழா, பிரான்சின் மொனாக்கோவில் நடந்தது. இந்த விழாவில், ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்த விழாவானது, கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதினை, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றார்.

மேலும் காயங்கள், ஆட்டத்தில் சரிவு ஆகியவற்றில் இருந்து மீண்டு வந்ததற்காக, சிறப்பு விருது ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம், ரோஜர் பெடரர் 6 லாரெஸ் விருதுகளை பெற்றுள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றிய பெடரர் கூறுகையில், ‘இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். மதிப்பு மிக்க இந்த விருதை இன்னொரு முறை பெற்றது அற்புதமான அனுபவம் ஆகும்.
ஆனால், இரண்டு விருது பெற்றது உண்மையிலேயே வித்தியாசமான கௌரவமாகும். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக லாரியாஸ் அகாடமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
லாரெஸ் விருதினை அதிக முறை பெற்றவர் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Getty Images

இரட்டை விருது பெற்ற ரோஜர் பெடரர் - Reviewed by Author on March 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.