வவுனியா செட்டிக்குளத்தில் மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த கதி
ராமசாமி லோகநாதன் (வயது-58) என்பவர் நேற்றையதினம் காலை மாட்டினை மேச்சலுக்காக காட்டிற்கு கொண்டு சென்று கட்டி விட்டு மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார்.
மீண்டும் மாலை காட்டிற்கு சென்ற சமயத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு காட்டிற்கு சென்ற அயலவர்கள் அவரை மீட்டேடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் வவுனியா செட்டிக்குளம் , ஓமந்தை , நெடுக்கேனி போன்ற பகுதிகளின் காட்டு யானைகள் மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்புக்களையும் சேதமாக்குகின்றது.
செட்டிக்குளத்தில் கடந்த இரண்டு மாதத்தினுள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர் இதற்கு அதிகாரிகள் எந்த கவனமும் எடுத்துக் வில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்,

வவுனியா செட்டிக்குளத்தில் மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த கதி
Reviewed by Author
on
March 04, 2018
Rating:

No comments:
Post a Comment