உலகின் தலைசிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியல் -
கியோட்டோ – ஜப்பான்
சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த நகரமாக முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் உள்ள கியோட்டோ தான்.
கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேலாக ஜப்பானின் தலைநகரமாக இருந்த நகரம்.
யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் இந்த நகரமும் இடம் பிடித்துள்ளது. இங்குள்ள 17 இடங்கள் மற்றும் மடங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் மடங்கள் கொண்ட நகரம் என்ற பெயரும் கியோட்டோவுக்கு உண்டு.
சார்லஸ்டன் – அமெரிக்கா
வட அமெரிக்காவில் உள்ள ஐந்தாவது பெரிய நகரம் சார்லஸ்டன். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரமான இது தென் கரோலினா மாகாணத்தில் உள்ளது.
வளமையான சரித்திரம், அசர வைக்கும் கட்டடங்கள், சுவையான உணவகங்கள், பண்பான மக்கள் என்று இந்த நகருக்கு பெருமை சேர்க்கும் விடயங்கள் எக்கச்சக்கம்.
அதனால்தான் சுற்றுலாவாசிகள் இதை மிக நட்பான நகரம் என்று புகழ்கிறார்கள்.
ஃப்ளோரன்ஸ் – இத்தாலி
திரும்பிய பக்கமெல்லாம் அருங்காட்சியகங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும்.
அதிலும் எல்லாம் பழமை மாற்றாத பாரம்பரியத்திற்கு சொந்தம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்.
உலகிலேயே கலைப்பொக்கிஷங்களை அதிகமாக கொண்டுள்ள நகரம் இதுதான்.
சரித்திர காலத்திலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திலும் சிறந்த நகரம். 1982-ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஃப்ளோரன்ஸ் நகரை சேர்த்தது.
பழமை மட்டுமல்லாது உலகிற்கு ஃபேஷனை அறிமுகப்படுத்துவதிலும் இந்த நகரம்தான் முதன்மையாக உள்ளது.
இஸ்தான்புல் – துருக்கி
ஐரோப்பாவில் மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்களைக் கொண்ட நகரம் இஸ்தான்புல். மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்று.
சுற்றுலா செல்பவர்கள் அதிகம் வருகைதரும் நகரங்களில் இஸ்தான்புல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த நகரில் பழமை மிக்க 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், 49 தேவாலயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.
உலகின் தலைசிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியல் -
Reviewed by Author
on
March 04, 2018
Rating:

No comments:
Post a Comment