கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு -
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு தவிசாளர் க.தவராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது தவிசாளரின் தலைமை உரையினை தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினர்களின் கன்னி உரை நடைபெற்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் காட்டு மரங்கள் அழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். வாராந்த சந்தை செயற்படுத்துவது தொடர்பிலும், பிரதேசத்தின் வீதிகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் உறுப்பினர்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தண்ணீருற்று சந்தைக்கான கடைத்தொகுதி நிர்மானிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முள்ளியவளை சந்தையில் உள்ள கடைத்தொகுதி குத்தகைக்கு விடுவது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு -
Reviewed by Author
on
April 19, 2018
Rating:

No comments:
Post a Comment