சிரியாவில் சற்று முன் பயங்கர ஏவுகணை தாக்குதல்: பலர் பலி என அச்சம்
சிரியாவின் உள்ளூர் ஊடகம் ஒன்றே இத்தகவலை தெரிவித்துள்ளது. அதில், சிரியாவின் முக்கிய நகரங்களான ஹாமா மற்றும் அலெப்போ பகுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிபயங்கரமாக குறிப்பிட்ட பகுதியை தாக்கிய ஏவுகணை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் சிரியாவின் இராணுவ கிடங்குகளை நோக்கியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை எனவும், காயம் மற்றும் இறப்புகள் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு ஊடகமான Sky News Arabia இந்த தாக்குதலின் காரணமாக 40-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்திருக்க கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதில் ஹாமாவில் நடந்த பயங்கர ஏவுகணை தாக்குதல் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாகவும், இதன் காரணமாக அருகில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிரியாவில் சற்று முன் பயங்கர ஏவுகணை தாக்குதல்: பலர் பலி என அச்சம்
Reviewed by Author
on
April 30, 2018
Rating:

No comments:
Post a Comment