’உணவு பொதி விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது’
மதிய உணவு பொதியின் விலை, 10 ரூபாவாலும், அப்பத்தின் விலை 2 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு, நுகர்வோர் சார்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எரிவாயு விலையேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மதிய உணவுப் பொதியின் விலையை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என நுகர்வோர் உரிமையை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள், நுகர்வோருக்கு தரமான உணவினை விற்பனை செய்வதற்கு ஒருநாளும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ரஞ்சித் விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயுக்களின் விலைகள் 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாளை முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், அசேல சம்பத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
’உணவு பொதி விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது’
Reviewed by Author
on
April 30, 2018
Rating:

No comments:
Post a Comment