நான்காவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியானார் புதின் -
ரஷ்யாவில் விளாடிமிர் புதின் கடந்த 18 ஆண்டுகளாக ஜனாதிபதி அல்லது பிரதமர் என அதிகாரத்தில் உள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் அங்கு ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 76 சதவிதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று புதின் வெற்றி பெற்றார். ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.
மேலும், புதினை எதிர்த்து போட்டியிட்ட அலெக்ஸி நவால்னி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புதினுக்கு எதிராக ரஷ்யாவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அனுமதிக்கப்படாத பேரணியில் கலந்து கொண்டதாக நவால்னி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதின் நான்காவது முறையாக ரஷ்யா நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
நான்காவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியானார் புதின் -
Reviewed by Author
on
May 07, 2018
Rating:
No comments:
Post a Comment