அண்மைய செய்திகள்

recent
-

இது நடந்தால் 8 பேரை வெட்டுவேன்: நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம் -


தமிழகத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் நேற்று சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக, கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பரிசலில் சென்ற மன்சூர் அலிகான் ஏரியை சுற்றி பார்த்ததுடன், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. மேலும், அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்’ என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓமலூர் அருகே உள்ள சட்டூர், தும்பிபாடி, கமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகளை சந்தித்தார்.
மேலும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்க்கும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

இது நடந்தால் 8 பேரை வெட்டுவேன்: நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம் - Reviewed by Author on May 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.