ஒரு போட்டியோடு ஐபிஎல்லில் காணமல் போன இலங்கை வீரர்: கண்டு கொள்ளாமல் இருக்கும் மும்பை
இதில் கடந்த முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகிறது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்தணி 3 வெற்றி 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
இந்த அணியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்சயா 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுழற்பந்து வீச்சில் மிகவும் கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 14-ஆம் திகதி நடந்த டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 47 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.
அப்போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. குறித்த போட்டியின் போது அகிலா அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால், மும்பை அணி அவரை கண்டு கொள்ளாமல் உள்ளது.
மேலும் மும்பை அணிக்கு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு போட்டியோடு ஐபிஎல்லில் காணமல் போன இலங்கை வீரர்: கண்டு கொள்ளாமல் இருக்கும் மும்பை
Reviewed by Author
on
May 05, 2018
Rating:
No comments:
Post a Comment