கேப்பாப்புலவு நிலங்களை இராணுவத்தினருக்கு எழுதி வழங்க முயற்சி?
கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் நிலங்களை படையினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்குவதற்கு சில நபர்கள் இன்று முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை அறிந்த கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டத்தில் கலந்திருந்த மக்கள் முயற்சி எடுக்கப்பட்ட இடத்திற்கு இன்று பிற்பகல் படையெடுத்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
காணிகளை நிரந்தரமாக படையினருக்கு வழங்குபவர்கள் மற்றும் வழங்க மறுப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து மீள்குடியேற்ற அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு காணி அதிகார சபை அதிகாரி மற்றும் கேப்பாப்புலவு கிராம சேவையாளர் அதில் கலந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலங்கள் தமக்கு தேவை என ஒவ்வொருவரும் தனித்தனியே கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியுள்ளதாக கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கேப்பாப்புலவு நிலங்களை இராணுவத்தினருக்கு எழுதி வழங்க முயற்சி? 
 Reviewed by Author
        on 
        
May 28, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 28, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
May 28, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 28, 2018
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment