மன்னாரில் தோண்ட வெளிவரும் எலும்புத் துண்டுகள் -
'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும், மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள், தலைவர்கள் கலந்து கொண்டதோடு, மன்னார் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இன்று அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள் மீட்கப்பட்டது.
மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் பரவலாக மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் விசேட குழுவினர் தமது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் பல்வேறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளத மேலும் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மண்ணில் இருந்து அகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள், பற்கள் என்பன தொடர்ச்சியாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தோண்ட வெளிவரும் எலும்புத் துண்டுகள் -
Reviewed by Author
on
May 30, 2018
Rating:

No comments:
Post a Comment