தூத்துக்குடி மக்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்திய ரஜினி
தூத்துக்குடியில் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த கட்டத்திலேயே, `போராடுவதற்கு என ஒரு கோஷ்டி உள்ளது.
கோஷம் போடுவதற்கு என ஒரு கோஷ்டி உள்ளது. எனவே, இப்படிப்பட்டதையெல்லாம் நாம் செய்யத் தேவையில்லை’ எனக் கூறினார்.
ஆக, அடிப்படையிலேயே மக்கள் போராட்டத்துக்கு எதிரியாகவே அவர் தன்னைக் வெளிக்காட்டி கொண்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 23 ஆண்டுகால மக்களின் போராட்டங்கள், கடந்த 100 நாள்களில் அரசியல் கட்சிகள் தலையீடின்றி தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடிய போராட்டம் மிக வலிமை அடைந்தன் விளைவாக ஆலை தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.
அறவழியில் போராடிய மக்களின் இந்த போராட்டத்தில் லிமை அடைந்தன் விளைவாக ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் இப்போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷக் கிருமிகள் உள்ளே நுழைந்து விட்டனர் என மக்களை இழிவாகவும் கொச்சைப் படுத்தியும் பேசி உள்ளார்.
மக்களை இப்படிப் பேசியதற்காக ரஜினிகாந்த், தூத்துக்குடி மக்களிடம் பகிரங்கமான மன்னிப்பு கேட்க வேண்டும்.
சமூக விரோதிகள் என்றால் தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் போராட்டத்தில் கலந்துகொள்ள வருவார்களா?
மக்கள்மீது வன்மையான அடக்கு முறையைக் கையாண்ட காவல்துறையும், பொறுப்பற்ற மாவட்ட நிர்வாகமும்தான் சமூக விரோதிகள். வன்முறையைத் தூண்டியதற்கு இவர்கள்தாம் காரணம் என வாசுகி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்திய ரஜினி
Reviewed by Author
on
May 31, 2018
Rating:

No comments:
Post a Comment