அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் முறைப்பாட்டுக்கு உடனடி தீர்வு- மன்னார் நகரசபை

மன்னார் உப்பள பிரதான வீதி குமரன் திரையரங்கு முன்னாள் குழியாக கிடக்கின்றது.என மக்களின் முறைப்பாட்டினை எமது இணையம் ஊடாக  05-05- 2018 வெளிப்படுத்தி இருந்தோம் அச்செய்திக்கு பலனாக குழியாக கிடந்த வீதி சீர்செய்யப்பட்டுள்ளது.

சுமார் 10இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட இவ் அபிவிருத்தியில் தான் மேற்படி பிரச்சினை நடைபெற்றது. மன்னார் நகரசபை உடனடியாக  ஒப்பந்தக்காரர்களுடன் கதைத்து  வீதியில் இருந்த குழியினை புதிய கொங்ரீட் பிளேட் மூலம் சரி செய்துள்ளனர் பாராட்டுக்கள்.
இருப்பினும் வீதியின் இருமருங்கிலும் மணல் ஒழுங்கான முறையில் செப்பனிடபடவில்லை.......






  05-05- 2018 வெளியான செய்தி இணைப்பு


மன்னார் உப்பள பிரதான வீதி குமரன் திரையரங்கு முன்னாள் குழியாக கிடக்கின்றது.

 தீவிரமாக அபிவிருத்தி செய்யப்பட்ட இப்பிரதான வீதியானது பணிகள் முடிந்து மக்கள் பாவனைக்காக விடப்பட்ட பதினைந்து நாட்கள் தான் அகுது அதற்குள் வோக் உடைந்து குழிவிழந்துள்ளது அக்குழியில் குச்சியில் சொப்பின் கட்டி பறக்கவிட்டிருக்கிறார்கள்  ஒப்பந்தக்காரரின் சிறப்பா அல்லது வேலையாட்களின் சிறப்பா..யாருப்பா பொறுப்பு மக்கள் வெறுப்பில்….
தற்போது மன்னாரில் நடைபெறுகின்ற வீதி மற்றும் வாய்க்கால் வீட்டுத்திட்ம் ஏனைய பணிகளில் தரமற்ற வேலைப்பாடுகள் நிதிமோசடியும் அதிகமாக நடைபெறுகின்றது.

TENDERS-ஓப்பந்க்காரர்கள் பெரும்புள்ளிகளாகவும் அரசியல் செல்வாக்குப்பெற்றவர்களாகவும் இருப்பதினால் இவர்கள் ஒப்பந்தம் எடுத்து உள்ளுர் மற்றும் வெளியூர் வேலையாட்களுக்கு கொடுப்பதாலும் பொறுப்பாக நின்றுபார்க்ககூடியவர் அரச பகுதியில் இருந்தும் ஒப்பந்தக்காரர் பகுதியில் இருந்தும் T.O வும் D. O பார்வையிடுவதில்லை.......

அப்படிப்பார்வையிட்டாலும்…..????
வீதி மற்றும் வாய்க்கால் என தோண்டப்படுகின்ற மணல் கல் அதுவும் விலைக்கு விற்கப்படுகின்றது.
கழிவுகள் மட்டும் வீதிகளில் அப்படியே கிடக்கின்றது........

வேலை முடிந்ததும் இரண்டு பகுதிக்கும் அந்த மணல்களே கல்லினையே போட்டு மூடவேண்டும் (வீதியின் இரண்டு பகுதியிலும் பெரும் பள்ளங்கள் அதிலும் விழுந்தெழும்ப வேண்டியுள்ளது) அப்படி செய்யமால் வழித்தள்ளி விற்றுவிடுகின்றாரகள்.
வாய்க்கால் மேல்பகுதிகள்  பிரதான வோக் தரமற்ற மூடிகளை போடுவதாலும் அவையும் உடைந்து விடுகின்றது.

இதனால் மக்களும் வாகனசாரதிகளும் விபத்திற்கும் பெரும்பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.கால்நடைகளும் பெரும்பாதிப்புக்குள்ளாகின்றது.

ஓப்பந்தம் கொடுப்பவர்களும் எடுப்பவர்களும் வேலை செய்பவர்களும் பொறுபற்ற தன்மையில் தரமற்றவேலைகளை பணத்திற்காக செய்கின்றார்கள் மக்களின் பணத்தினை அபிவிருத்தி என்ற பெயரில் ஏமாத்தி கொள்ளையடிக்கின்றார்கள்.

தற்போது மன்னாருக்கு கனரக வாகனங்களின் வருகை அதிகரித்துள்ள்து அப்படியிருக்கும் போது இப்படி தரமற்ற அபிவிருத்திகள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல....

இந்த பிரச்சினைக்கு மிகவிரைவில் சம்மந்தப்பட்டவர்கள் தீர்வு காணவில்லை என்றால் பின்னரான செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக அமையும்.
மகத்தானது மக்கள் சேவை….






மக்களின் முறைப்பாட்டுக்கு உடனடி தீர்வு- மன்னார் நகரசபை Reviewed by Author on May 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.