கடந்த ஆண்டு அனிதா...இந்த ஆண்டு கிருஷ்ணசாமி: கொந்தளிக்கும் தமிழர்கள் -
இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, சி.பி.எஸ்.சி சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வெளிமாநிலங்களில் தேர்வை எழுதும் நிலைக்கு தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மகனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் வந்திருந்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இந்தச் சம்பவம் நீட் தேர்வினை எதிர்கொள்ள தங்களின் பிள்ளைகளை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற மாணவர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
தமிழக அரசின் கையாலாகாத நடவடிக்கையின் காரணமாகவே நீட் தேர்வு தமிழகத்தில் நுழைக்கப்பட்டது. இப்போது, நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகி விட்டது. தற்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு தமிழக அரசும் சி.பி.எஸ்.சி-யும் பொறுப்பேற்க வேண்டும் என்று திருவாரூரைச் சேர்ந்த ஊமத்துரை கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்காக 15 மணி நேரம் பயணம் செய்யும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அச்சத்தின் காரணமாகவே அப்பாவி ஒருவரின் உயிர் பறிபோயிருக்கிறது. பலியான அந்த உயிருக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? அந்த மாணவனின் எதிர்காலத்துக்கு ஆட்சியாளர்களும் தேர்வை நடத்துபவர்களும் என்ன கைமாறு செய்யப் போகிறார்கள்? என ஆதங்கப்பட்டுள்ளனர்.
தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் கிருஷ்ணசாமியின் மரணம் தடுக்கப்பட்டு இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுத தமது மகனை கேரளா அழைத்து சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்யும் என அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவனின் தந்தை உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டு அனிதா...இந்த ஆண்டு கிருஷ்ணசாமி: கொந்தளிக்கும் தமிழர்கள் -
Reviewed by Author
on
May 07, 2018
Rating:

No comments:
Post a Comment