தென்கொரியாவைப் பற்றி இந்த ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா? -
- தென்கொரியாவில் உள்ள இளம் காதலர்கள் தாங்கள் காதலிப்பதை எஞ்சிய அனைவருக்கும் தெரியப்படுத்தும்படி ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வலம் வருகின்றனர். இளம் காதலர்களுக்காகவே தென் கொரியாவில் உள்ள கடைகளில் பல எண்ணிக்கையிலான ஒரேப்போன்ற உடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
- தென் கொரியாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசே கர்ப்பிணி பெண்களுக்கு 500 டொலர் மருத்துவ செலவினங்களுக்காக வழங்குகிறது. மட்டுமின்றி பேருந்துகள், ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்துகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு இருக்கை ஒதுக்கப்படுகிறது.
- தென் கொரியாவில் உள்ள பெரும்பலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பழ வகைகள் உள்ளிட்ட உணவுகளை வாடிக்கையாளர்கள் சுவைத்து பார்த்து வாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- தென் கொரியாவில் பரிசுப்பொருட்கள் வழங்குவதிலும் சிறப்பான நடைமுறையை கடைபிடிக்கின்றனர். இங்கு பல வகை உணவுகளை உள்ளடக்கிய food basket-ஐ பரிசாக அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
- கல்விக்கு மிக மிக முக்கியத்துவம் தருவதால் தென் கொரிய மாணவர்கள் மிக அதிக நேரம் பாடசாலைகளில் கழிக்கின்றனர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள்நடைபெறுகிறது.
- அதிகாரிகளுக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ பரிசாக விலை உயர்ந்த பொருட்களை அளிப்பது லஞ்சமாகவே கருதப்படுகிறது. இதனால் நன்றியை வெளிப்படுத்த பெற்றோர்கள் தங்கள் சிறார்களின் ஆசிரியர்களுக்கு இனிப்பு பாக்ஸ் அல்லது ஒரு காஃபியை மட்டுமே பரிசாக அளிக்கின்றனர்.
- தென் கொரியா மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருப்பதால் இங்குள்ள இளைஞர்களுக்கு மேற்கத்திய கலாச்சாரம் தொடர்பில் எந்த அறிமுகமும் இல்லையாம். அவர்களுக்கு தென் கொரியாவில் உள்ள இசை மற்றும் அங்குள்ள கலாச்சாரம் மட்டுமே அத்துப்படியாம்.
- தென் கொரியாவில் குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாம். ஆனால் பொது கழிப்பிட வசதியானது நகரின் அனைத்து பகுதியிலும் பல எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளது.
- கடின உழைப்பாளிகளான தென் கொரியர்களின் நலன் கருதி அங்குள்ள அரசு சமீபத்தில் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது அங்குள்ள அலுவலகங்களில் வெள்ளியன்று மாலை அனைத்து கணினிகளுக்கும் ஓய்வு அளிக்கப்படும், இதனால் தென் கொரியர்கள் எஞ்சிய நேரத்தை தங்கள் குடும்பத்துடன் செலவிடுவது கட்டாயமாக்கப்பட்டது.
தென்கொரியாவைப் பற்றி இந்த ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா? -
Reviewed by Author
on
May 04, 2018
Rating:
No comments:
Post a Comment