அண்மைய செய்திகள்

recent
-

சீக்கிய பெண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த கெளரவம் -


அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறையில் முதல் முறையாக சீக்கிய பெண் ஒருவர் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறை அகாடெமியில் படித்தவர் குர்சோச் கவுர். இவர், கடந்த வாரம் தனது பட்டப்படிப்பினை முடித்து வெளியேறியுள்ளார்.

இந்தநிலையில், அவருக்கு நியூயார்க் காவல் துறையின் கீழ் துணை நிலை காவல் அதிகாரியாகப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து பணி நியமன ஆணையைக் கையில் பெற்றுக் கொண்ட குர்சோச் கவுர், சீக்கியர்களின் பாரம்பரிய அடையாளமான டர்பனுடன் கடந்த 17-ம் திகதி பணியில் சேர்ந்துள்ளார்.

இதன்மூலம், நியூயார்க் காவல்துறையில் சேர்க்கப்பட்ட முதல் சீக்கியப் பெண் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளார் குர்சோச் கவுர்.
மட்டுமல்லாமல், டர்பனுடன் அவர் பதவியேற்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
குர்சோச் கவுரை வரவேற்று, சீக்கிய அதிகாரிகளுக்கான கூட்டமைப்பு டுவிட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளது.
அதில், `நியூயார்க் காவல் துறையில் முதன் முதலாக டர்பனுடன் துணைநிலை காவல் அதிகாரியாகப் பதவியேற்றுள்ள குர்சோச் கவுரை வரவேற்கிறோம்.

இதற்காக, நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும், பாதுகாப்புடன் இருக்கவும் கேட்டுக்கொள்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நியூயார்க் காவல் துறையும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதிக்க முடியும் என்பதுக்கு, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக குர்சோச் கவுர் இருப்பார்' எனத் தெரிவித்துள்ளது.

சீக்கிய பெண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த கெளரவம் - Reviewed by Author on May 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.