30 வருடங்களின் பின்னர் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்ற இரணைமடுக்குள நீர் -
இந்த நிலையில், 30 வருடங்களின் பின்னர் இரணைமடு நீர் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.
இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீர்ப்பாசன வாய்க்கால்களை சோதனையிடுவதற்காகவும், புதிதாக பொருத்தப்பட்ட நீர்பம்பிகளின் இயங்கு நிலையை அவதானிப்பதற்காகவும் இன்று நீர்ப்பாசனம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்,
குறித்த குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியில் குறித்த ஏற்றுநீர்ப்பாசன திட்டமும் உள்ளடங்குகின்றது.
யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட ஏற்று நீர்ப்பாசன விவசாய செய்கை அடுத்த வருடம் முதல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2 வருடங்களிற்கு மேலாக இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏற்று நீர்ப்பாசன திட்டத்தின் பணிகளும் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன வாய்க்கால்களை சோதனையிடுவதற்காகவும், புதிதாக பொருத்தப்பட்ட நீர்பம்பிகளின் இயங்கு நிலையை அவதானிப்பதற்காகவும் இன்றைய தினம் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
சோதனைக்காக வாய்க்கால் வழியாக அனுப்பப்பட்ட நீரை திருவையாடு பகுதி மக்கள் ஆவலுடன் பார்வையிட்டுள்ளனர்.
30 வருடங்களின் பின்னர் இரணைமடு குளத்திலிருந்து நீர் குடியிருப்பு பகுதிகள் நோக்கி சென்றமை தொடர்பில் மகிழ்ச்சி அளிப்பதாக திருவையாறு ஏற்று நீர்ப்பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
30 வருடங்களின் பின்னர் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்ற இரணைமடுக்குள நீர் -
Reviewed by Author
on
June 16, 2018
Rating:
Reviewed by Author
on
June 16, 2018
Rating:


No comments:
Post a Comment