அண்மைய செய்திகள்

recent
-

அகதி முகாம்களை காலி செய்யும் பிரான்ஸ்: தொடரும் நடவடிக்கைகள் -


பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் கடந்த வாரம் சில அகதி முகாம்கள் அகற்றப்பட்டதைப் போலவே இன்றும் இரண்டு முகாம்கள் காலி செய்யப்பட்டன.
பாரீஸின் Porte des Poissonniers மற்றும் Canal Saint Martin ஆகிய இரண்டு அகதி முகாம்களை காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாரீஸ் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
முகாம்களில் மோசமான நிலையில் 1000 அகதிகள் வரை தங்கியிருப்பதாக கருதப்படுகிறது.
பாரீஸின் உள்ளேயும் வெளியேயும் உள்ள முகாம்களுக்கு பேருந்துகளில் அழைத்து செல்லப்படும் அகதிகள் அங்கு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Porte des Poissoniersஇல் தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் சூடான் மற்றும் எரிட்ரியாவைச் சேர்ந்தவர்கள்.
Canal Saint-Martin முகாமில் தங்கியிருப்பவர்கள் ஐரோப்பாவில் வேறு எங்கும் புகலிடம் கிடைக்காத ஆப்கன் அகதிகள்.
பிரான்ஸில் Calais பகுதியில் கூடியிருந்த மாபெரும் அகதிகள் கூட்டம் ஒன்று 2016இல் அதிகாரிகளால் அகற்றப்பட்டதையடுத்து அகதிகள் படையெடுப்பது ஒரு முடிவுக்கு வந்தது.
மீதமுள்ளோர் பாரீஸிலும் பிரான்ஸ் இத்தாலி எல்லையிலும் கூடியிருந்தனர்.


அகதி முகாம்களை காலி செய்யும் பிரான்ஸ்: தொடரும் நடவடிக்கைகள் - Reviewed by Author on June 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.