அண்மைய செய்திகள்

recent
-

நீட் தேர்வில் தோல்வி! மாணவி பிரதீபா தற்கொலை -


நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரதீபா 12ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். தற்போது நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது.
இதனால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரதீபா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை.

ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் தோல்வி! மாணவி பிரதீபா தற்கொலை - Reviewed by Author on June 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.