அகதிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் நாடு:
ஜேர்மனியில் அகதிகளாக வந்துள்ளவர்களில் நான்கில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கிட்டியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நேற்று வெளியான ஆய்வு ஒன்று, 2015, 2016 ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சனையின் போது ஜேர்மனிக்கு அகதிகளாக வந்தவர்களில் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு போர் அகதிகளுக்கு அனுமதியளிப்பதாக ஜேர்மனி முடிவு செய்ததைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு வந்த அகதிகளில் நான்கில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு கிட்டியுள்ளதாக Institute for Job Market and Career Research (IAB) என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் அகதிகளில் ஐந்தில் ஒருவர் வெறுமனே வேலை மட்டும் செய்வதோடு நிறுத்தி விடாமல் முறையாக வரியும் செலுத்துகிறார்.
இந்த நிலை தொடர்ந்தால், ஐந்து ஆண்டுகளில் அகதிகளில் பாதி பேருக்கு வேலை கிடைத்துவிடும் என்று ஆய்வு மேற்கொண்ட குழுவின் தலைவரான Herbert Brücker தெரிவித்தார்.
இந்த ஆண்டின் மீதியுள்ள கால கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 8,500 முதல் 10,000 அகதிகள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்களோடு ஈரானியர்களும் நைஜீரியர்களும் எளிதில் வேலை தேடிக் கொள்கிறார்கள்.
அதே நேரத்தில் புகலிடம் தேடி வருவோரில் பெரும்பான்மையினரான சிரியர்கள் ஒருவேலையைத்தேடிக் கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அகதிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் நாடு:
Reviewed by Author
on
June 01, 2018
Rating:

No comments:
Post a Comment