மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலையின் கலை விழா-2018(படங்களுடன்)
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலையின் வருடாந்த கலை விழாவானது இம்முறையும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று 31-05-2018 மாலை 5-30மணிக்கு வாத்தியங்கள் இசைமுழங்க கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் FSC தலைமையில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.
விருந்தினர்களாக….
திரு.அ.பத்திநாதன் பிரதம செயலாளர்-வடமாகாணம்
அருட்சகோ.அட்றியன் கிறிஸ்ரி குருஸ் FSC
அருட்தந்தை A.விக்ரர் சோசை குருமுதல்வர்-மன்னார் மறைமாவட்டம்
திரு.S.குணபாலன் மேலதிக அரசாங்க அதிபர்-மன்னார் மாவட்டம்
திரு.M.பரமதாசன் பிரதேச செயலாளர் மன்னார் நகரம்
திருமதி.S.சுகந்தி செபஸ்ரியான் வலையக்கல்விப்பணிப்பாளர்-மன்னார்
திரு.ஞா.அன்ரனி டேவிட்சன் நகரசபை முதல்வர்-மன்னார்
திருமதி.P.M.M.சில்வா உதவிக்கல்விப்பணிப்பாளர் அழகியல்-வலையக்கல்வி அலுவலகம் மன்னார்
திரு.செ.ரூபகுமார்-மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்
இவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பாடசாலை பழையமாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்ட சிறப்பான கலைவிழாவாக அமைந்தது.
நிகழ்வுகழாக
தரம் 01தொடக்கம் 13வரையான மாணவர்களின் திறமையின் வெளிப்பாடாக.
- பாடல்
- நாடகம்
- நடனம்
- பரதநாட்டியம்
- நாட்டுக்கூத்து
விருந்தினர்களின் உரையின் சாரம்சம்
தமழர்களின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தினையும் கட்டிக்காக்க வேண்டியபொறுப்பு எமக்குள்ளது அந்தவகையில் இவ்வாறான நிகழ்வுகள் மூலம் இந்த நவீனத்தில் இருந்து எமது கலை கலாச்சாரத்தினை காத்துக்கொள்ள மாணவர்களை இப்பராயத்தில் இருந்தே தயார்படுத்த வேண்டும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறல்வேண்டும் மாணவர்கள் கல்வியோடு ஒழுக்கம் விளையாட்டு தலைமைத்துவம் பண்பு போன்றவற்றினை கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை….
கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு பாடசாலை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலைவிழா நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலையின் கலை விழா-2018(படங்களுடன்)
Reviewed by Author
on
June 01, 2018
Rating:

No comments:
Post a Comment